பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா – தடுமாறிய இலங்கை அணி!

இந்தியாவுக்கு இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்டில்,இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இந்நிலையில்,தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசல் மெண்டிஸ்,கேப்டன் திமுத் கருணாரத்ன ஆகியோர் களமிறங்கினர்.
ஆனால்,வந்த வேகத்திலேயே குசல் மெண்டிஸ் 2 ரன்களிள் விக்கெட்டை இழக்க லஹிரு திரிமான்ன களமிறங்கினார்.ஆனால்,அவரும் 8 ரன்களில் வெளியேற,கேப்டன் கருணாரத்னவும் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன்பின்னர்,ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கி அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்த நிலையில்,43 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து,அடுத்தடுத்து விக்கெட்டுகளை தொடர்ந்து பறிகொடுத்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை எடுத்துள்ளது.இந்தியா சார்பில் அதிகபட்சமாக,பும்ரா 3 விக்கெட்டுகளும்,ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!
April 2, 2025
‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!
April 2, 2025