#BREAKING: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்..!

Default Image

மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெறவுள்ள  இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளுக்கும் , சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய  மாநிலங்களில் தலா 1 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த அனைத்து இடங்களுக்கும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 24-ஆம் தேதி கடைசி நாளாகும். அதே சமயம், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு மார்ச் 28 -ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று ஏப்ரல் 16-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested