#Breaking:பிஎஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைப்பு!
2021-2022 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.முன்னதாக பி.எஃப் மீதான வட்டி இரண்டு ஆண்டுகளாக 8.50% ஆக இருந்த நிலையில்,தற்போது 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக,2018-19 ஆம் ஆண்டு 8.65% ஆக இருந்த வட்டி அதன்பின்னர்,8.50 ஆக குறைக்கப்பட்டது.எனவே,தொழிலாளர்களின் வைப்பு நிதி வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படக் கூடாது என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வரும் நிலையில்,தற்போது 8.50% லிருந்து 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.