#BREAKING: Paytm-மில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க- ரிசர்வ் வங்கி தடை..!
பணபரிவர்த்தனை விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் Paytm payment வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப தணிக்கை குழுவின் ஆய்வுக்கு பின் அனுமதி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கு உடனடியாக தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய ஐடி தணிக்கை நிறுவனம் ஒன்றை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டுமெனில், ஐடி தணிக்கையாளர்களின் அறிக்கையை பார்த்தபின், ரிசர்வ் வங்கியிடம் உரிய அனுமதி பெற்று சேர்க்க வேண்டும். பேடிஎம் வங்கியில் கண்காணிப்பு பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.