ஒரே நாடு ஒரே தேர்தல்; அதற்கு வாய்ப்பில்லை- சுப்பிரமணியன் சுவாமி..!
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில், இன்று இந்துத் தலைவர் ஸ்ரீ வேதானந்தனத்தின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது:
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது. ஏனெனில், அது முடிவுக்கு வந்துவிட்டது. ராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளேன். இங்கு உள்ள சில முட்டாள்தனமான அமைச்சர்கள் மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பிப்போம் என கூறி வருகிறார்கள்.
யாராலும் இனி சேது சமுத்திரத் திட்டத்தை தொட முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது. அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த நாங்கள் தயார் என இந்திய தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்திருந்தார் எனப்து குறிப்பிடத்தக்கது.