தமிழகத்தில் எதற்கும் துணிந்தவன் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூரி, வினய்ராய், சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.
நேற்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வழக்கமாக பாண்டிராஜ் எடுக்கும் கமர்ஷியல் படமாகமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு பிடித்த வாறு வேறொரு பாணியில் படத்தை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 9.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.