கையில் துப்பாக்கியுடன் மிரட்டல் லுக்கில் செல்வராகவன்.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்.ஜி.கே ஆகிய திரைப்படங்களை தமிழ் சினிமாவில் இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் செல்வராகவன். தற்போது படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் சில படங்களில் நடித்தும் வருகிறார்.
அந்த வகையில், சாணிகாயிதம், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். இந்த படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. தற்போது நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி முக்கியமான கதாபாத்திரத்தில் அவரும் நடித்தும் வருகிறார்.
இதில் சாணிகாயிதம் படத்தை அருண் மாதேஷ் வரன் இயக்கியுள்ளார். படத்தில் செல்வராகவனுடன் நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் கையில் துப்பாக்கியுடன் மிரட்டலானா லுக்கில் சாணிகாயிதம் படத்திலுள்ள ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
#saanikayidham pic.twitter.com/cEXkoJ4nMa
— selvaraghavan (@selvaraghavan) March 9, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025