அறிவின் 31 ஆண்டுகள் சிறை – பேரறிவாளன் தாயார் ட்வீட்..!

Default Image

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பேரறிவாளனின் தாயார் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், ‘அறிவின் 31 ஆண்டு சிறை, நன்னடத்தை, சிறையில் பெற்ற கல்வி, உடல்நிலை ஆகியன கருதி பிணை வழங்கப்பட்டுள்ளது. துணை நின்ற மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு Senior Counsel Mr.RakeshDwivedi, Senior Counsel Mr.GopalSankaranarayanan உள்ளிட்ட அனைவருக்கும் கண்ணீர் மல்க நெஞ்சார்ந்த நன்றிகள்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்