பேரறிவாளனுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க இதுதான் காரணமா?

Default Image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு தமிழரின் விடுதலை தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் குரல் எழுப்பி வந்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். தற்போது உடல்நலக்குறைவால் பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு டெல்லி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பேரறிவாளன் பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமீன் வழங்க கோரி அவரது தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர்களுக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்றது.

இதன்பின்னர் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது. பேரறிவாளன் 32 ஆண்டுகளாய் சிறையில் இருக்கிறார் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தவர், சிறையில் நல்லபடியாக நடந்து கொண்டுள்ளார். பரோலில் வந்த போதும் நடத்தை சரியாக உள்ளது. மருத்துவத் தேவை இருக்கிறது மற்றும் சிறையில் படிப்பைத் தொடர்ந்துள்ளார் என பேரறிவாளனுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க இதுதான் காரணமான விஷயங்கள் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RCB vs RR - IPL 2025
PM Modi - Pakistan PM
Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM