#ICCTESTRANKING: ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடம்!

Default Image

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி – ஆட்டநாயகன் படத்தை வென்ற ஜடேஜா:

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி தற்போது இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மெஹாலியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. மெஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் மற்றும் 9 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் பட்டத்தையும் தட்டி சென்றார்.

ஜடேஜாவின் மும்முனை திறன்:

சமீப காலமாக ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். பேட்டிங் மட்டுமில்லாமல், பீல்டிங், பவுலிங் என மும்முனையிலும் அசத்தி வருகிறார். இதில் குறிப்பாக இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி பேட்டிங்கில் 175 ரன்களை குவித்த ஜடேஜா, பவுலிங்கில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியல்:

இந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா தற்போது 406 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவரைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல்:

இதுபோன்று, ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே முதலிடத்திலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மேலும், இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்திலும், மற்றொரு இந்திய வீரர் ரிஷப் பந்த் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தில் உள்ளனர். ஆனால், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு இடம் பின்தங்கி 6-வது இடத்தில் உள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல்:

இதனைத்தொடர்ந்து, ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் இராண்டவது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 10-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்