“உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்”:மனுக்களுக்கு உடனடி தீர்வு – மின்சார வாரியம் முக்கிய உத்தரவு!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்,பயனாளிகளின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்து மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்படி,தனி CM ஹெல்ப்லைன் (1100) உருவாக்கப்பட்டுள்ளது.அதில் பெறப்படும் புகார் மனுக்களை 100 நாட்களுக்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து புகார் மனுக்களையும் உடனே தீர்த்து வைப்பதற்காக, TANGEDCO இன் அனைத்து விநியோக வட்டங்களிலும் தலைமையகங்களிலும் கண்காணிப்பு பொறியாளர் தரத்தில் ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைப் பொறியாளர்/பணியாளர்களின் ஜோஹோ போர்ட்டலில் நிலுவையில் உள்ள அனைத்து புகார் மனுக்களுக்கும் தீர்வு காண, தலைமைப் பொறியாளர்/பணியாளர்/நிர்வாகக் கிளை அலுவலகத்தில் மூத்த பணியாளர் அதிகாரி/ஆய்வு செய்பவர் இதன் மூலம் நோடல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.மேலும்,நிலுவையில் உள்ள அனைத்து குறைதீர்க்கும் மனுக்களையும் தீர்த்து, குறிப்பிட்ட காலத்திற்குள் மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக அறிக்கை அனுப்புமாறு நோடல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025