மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! வரும் 19-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!
வரும் 20-ம் தேதி பெற்றோர்களுடன் பள்ளி மேலாண்மை குழு கலந்துரையாடல் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அன்று மேலாண்மை குழு சார்ந்த கூட்டம் மட்டுமே நடைபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும், மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் காரணமாக 19-ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.