நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்..!

பிரதமர் மோடி தலைமையில், நாளை டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, அண்டை நாடுகள் வழியாக மீட்கும் பணி நடைபெற்று வருவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 17,400 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.