#Breaking:உக்ரைனின் சுமி நகரில் குண்டுவெடிப்பு – 9 பேர் பலி!
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 13 நாட்கள் ஆகி விட்டது. ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியானது.இதனையடுத்து, உக்ரைனில் 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் தொடர்பாக மேலும் சில மணி நேரங்கள் கியூ, கார்கிவ், செர்னிவ், மரியூபோல், சுமி ஆகிய நககரங்களில் போர் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது.இதனிடையே,சுமி பகுதியில் உள்ள இந்தியர்கள் வெளியேற உதவ ரஷ்யாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில்,உக்ரைனின் சுமி நகரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்த பட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
At least nine dead in bombing of Ukraine city Sumy, reports AFP quoting rescuers
— ANI (@ANI) March 8, 2022