இதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உண்டு – ஓபிஎஸ்

Default Image

ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகாலப் பயன்களை காலந்தாழ்த்தாமல் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் போக்குவரத்து பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க., ஆட்சியமைத்து பத்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களையும், அகவிலைப் படியையும்கூட தராமல் இழுத்தடித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சட்டப்படி போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஊதியம் ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இதற்கான நிதி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இல்லை என்றாலும், இதற்குத் தேவையான நிதியை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வுகாலப் பயன்களை உடனடியாக வழங்க ஆவன் செய்திடுமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்