#BREAKING: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாட்கள் சிபிஐ காவல்..!

Default Image

தேசிய பங்கு சந்தையின் (NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டு வந்த போது, இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைப் பெற்று தேசிய பங்கு சந்தையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பங்குச்சந்தை குறித்த ரகசிய தகவல்களை சாமியாரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 சாமியார் ஆலோசனைபேரில் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை திட்ட ஆலோசகராக நியமனம் செய்து, அவருக்கு பல முறை ஊதிய உயர்வை  சித்ரா வழங்கினார் என செபியால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதன்காரணமாக, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதம் மற்றும் பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையை செபி விதித்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றது. அதன்பின்னர், சித்ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதன்காரணமாக முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், சித்ராவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சித்ரா ராமகிருஷ்ணா நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தேசிய பங்குசந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாட்கள் சிபிஐ காவல் எடுத்து விசாரிக்க கொடுக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் சிபிஐ  கோரிய நிலையில் 7 நாள்கள் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  சென்னையில் ஆனந்த் சுப்பிரமணியம் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி சிபிஐஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது கூறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்