#Breaking:துப்பாக்கியால் சுடப்பட்ட இந்தியர் -ஆம்புலன்சில் சிகிச்சை!
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,பல முக்கிய நகரங்களில் இன்றும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது.
இதனையடுத்து,வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரைனை ரஷ்யா அழித்து வருகிறது எனவும்,வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே,ஆபரேசன் கங்கா திட்டத்தின்மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில்,நேற்று இரவு வரை 15,920 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,ஹர்ஜோத் சிங் என்ற இந்தியர், உக்ரைனில் உள்ள கிவ் நகரில் இருந்து போலந்து எல்லைக்கு செல்லும் வழியில்,இன்று காலை துப்பாக்கி குண்டுகளால் காயம் அடைந்தார். எனினும்,உக்ரைனின் கீவ் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட இந்தியர் ஹர்ஜோத் சிங்,உக்ரைன் எல்லையைக் கடந்து போலந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
உக்ரைன் எல்லையைத் தாண்டியதும் இந்தியர் ஹர்ஜோத் சிங்கிற்கு போலந்தின் ரெட் கிராஸ் ஆம்புலன்ஸ் -இல் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.அவருடன் இந்திய தூதர அதிகாரிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
Harjot Singh, an Indian national who sustained multiple bullet injuries in Kyiv, Ukraine, en route to the Poland border, earlier today. pic.twitter.com/Xay2UoRRAO
— ANI (@ANI) March 7, 2022