உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உலக நாடுகளுக்கு அவசர வேண்டுகோள்..!
உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 11 நாட்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ருங்கடலில் முக்கிய நகரமான ஒடேசாவின் துறைமுகத்தை தாக்க ரஷ்யா முயற்சிப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிட்ஸ்யா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது. வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரனை ரஸ்யா அழித்து வருகிறது. இந்நேரத்தில், உலக நாடுகள் ஏதாவது செய்ய வேண்டும்! குறைந்த பட்சம் வான்வெளியை அனைத்து நாடுகளும் மூட வேண்டும் அல்லது உக்ரைன் போரிட எங்களுக்கு போர் விமானத்தை அளிக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Терміново! pic.twitter.com/P99C5UJlte
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 6, 2022