#BREAKING: மாணவர்கள் வெளியேற வேண்டாம் – இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

Default Image

உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள் உயிரை பணயம் வைத்து எல்லை நோக்கி நடந்தே செல்லும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போரின் விளைவாக ஏற்கனவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்பவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு மாணவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே யாருக்கும் எந்தவிதமான ஆபத்து ஏற்பட கூடாது என்பதற்காக மாணவர்கள் வெளியேற வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

மறுபக்கம், உக்ரைனில் சிக்கியுள்ள  இந்தியர்கள் மற்றும் மாணவர்களை மீட்டு தாயகம் அழைத்துவர, 4 மத்திய அமைச்சர்களை நியமனம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டாம் என தெரிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள சுமி நகரில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் உயிரை பணயம் வைத்து 600 கி.மீ தொலைவில் உள்ள எல்லை நோக்கி நடந்து செல்லப்போவதாகவும், எங்கள் உயிருக்கு நிறைய ஆபத்துகள் உள்ளது. நாங்கள் நிறைய காத்திருந்துவிட்டோம், இனி மேலும் காத்திருக்க முடியாது எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மாணவர்கள் தெரிவித்திருந்த வீடியோ வெளியாகியிருந்த நிலையில், எல்லையை நோக்கி செல்வது ஆபத்தானது என்பதால் இதுபோன்ற அறிவுறுத்தலை இந்திய வெளியுறவுத்துறை வழங்கியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்