இந்தந்த இடங்களில் கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெற்ற திமுக..!
நேற்று திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்தது. இதைதொடர்ந்து, கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர்.
இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுக வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன்படி,
தருமபுரி:
விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தலைவர் பதவிக்கு திமுக வெற்றி பெற்றார்.
கரூர்:
இ.கம்யூ-க்கு ஒதுக்கப்பட்ட கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
கடலூர்:
மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்தலில் விசிக வேட்பாளர் தோல்வி விசிக வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
திருப்பூர் மாவட்டம்:
திருமுருகன்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ வேட்பாளர் வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
கோவை மாவட்டம்:
கருமத்தம்பட்டி நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தேனி மாவட்டம்:
அல்லிநகரம் நகராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.