#BREAKING: திமுகவின் 6-ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 6-ஆம் கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 6ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம்,ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி, மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி மற்றும் பெண்ணாடம் ஆகிய பேரூரராட்சிகளுக்கு திமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம், விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக. மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவர் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 5 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்த திமுக, தற்போது 6-ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.