மக்களே பயப்படாதீங்க..! தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25,592 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,88,599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.