#BUDGET2022:குடைகள் மீதான வரி எவ்வளவு உயர்வு தெரியுமா? – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Default Image

டெல்லி:குடைகள் மீதான வரி 20% உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

2022-23 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா ராமன் இன்று தாக்கல் செய்துள்ளார்.அதன்படி,தனது உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில்,குடைகள் மீதான வரி 20% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அதே சமயம்,பெரு நிறுவனங்களுக்காக கூடுதல் வரி 12% லிருந்து 7% மாக குறைக்கப்படும் என்றும்,வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், கற்களுக்கான சுங்கவரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும்,மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5%-ஆக குறைக்க முடிவு செய்திருப்பதாகவும்  மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 24 01 2025
Donald trump
Seeman - Thirumavalavan - LTTE leader Prbakaran
Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand