#BUDGET BREAKING: 3 ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ..!
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
அதன்படி, 2022- 2023 நிதியாண்டில் 22 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில்வே tடிராக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படும்.
நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவுபடுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.