தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி ரூ.3,186 கோடியாக குறைப்பு!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் மத்திய அரசின் நிதி ரூ.3,186 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2020-2021-ஆம் ஆண்டில் சமக்ரா சிக்-ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி ரூ.3,275 கோடியிலிருந்து ரூ.3,186 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கல்விசூழல் பாதிக்கப்பட்ட நிலையில், நிதியை குறைத்து மத்திய அரசு.
இதனிடையே, 2021-2022 நிதியாண்டில் 28 மாநிலங்களுக்கு இதுவரை மொத்தம் 17,747 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு 352 கோடியே 85 லட்சம் ரூபாயும், புதுச்சேரிக்கு 17 கோடியே 58 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.