ராக்கி பாய் உடன் மோத தயாரான தளபதி விஜய்.!

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பளார் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவைடைந்து வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முன்னதாக படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படாமல் ஏப்ரல் மாதம் மட்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் ஏப்ரல் 14- ஆம் தேதி யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎப் -2 படம் வெளியாகிறது. இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளியாகும் எனவும், இரண்டு படங்களில் எந்த படம் அதிகமாக வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
கண்டிப்பாக விஜய்க்கு ஏப்ரல் 14 மிகவும் நல்ல நாள் ஏனனெனில் இவரது நடிப்பில் ஏப்ரல் 14-ல் வெளியான சச்சின், தெறி ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. இதனால் விஜய் ஏப்ரல் 14-ஆம் தேதியே படத்தை வெளியிட கூற அதிக வாய்ப்புகள் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025