#BREAKING: சென்னை மேயர் வேட்பாளர் திமுகவின் பிரியா ராஜன்..!
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியா ராஜனும், துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து,மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியா ராஜனும், துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது. 28 வயதான பிரியா ராஜன் எம்.காம் பட்டதாரியாக உள்ளார். பிரியா ராஜன் முன்னாள் எம்.எல். ஏ செங்கை சிவத்தின் பேத்தி ஆவார். வடசென்னை பகுதியான திரு.வி.க நகரிலுள்ள 74-வது வார்டில் பிரியா ராஜன் வெற்றி பெற்றார். இதற்கு முன் தென்சென்னையை சந்தவர்களே திமுகவின் மேயராக தேர்வாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.