#BREAKING: அதிமுகவில் சசிகலா..? ஈபிஎஸ் அவசர ஆலோசனை..!
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுகவை சார்ந்தவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என தேனி மாவட்ட அதிமுகவை சார்ந்தவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா அதிமுகவின் தலைமையேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சசிகலா தலைமையேற்று டிடிவி தினகரன் வழிநடத்தினால் அதிமுக நல்ல நிலைக்கு வரும். எனக்கு கட்சி பொறுப்பு தரவில்லை என்பதால் தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாக பேசவில்லை . அதிமுகவின் தலைமை சரியில்லாததால் தான் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு தோல்வி அடைந்தது என தெரிவித்தார்.