தமிழகத்தில் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு ..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 348 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 320 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இன்று 52,851 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,50,041 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனவால் மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 38,009 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 946 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 34,07,595 ஆக உள்ளது.