#BREAKING: பொதுத்தேர்வு பாடவாரியாக அட்டவணை வெளியீடு..!

Default Image

10,11 மற்றும் 12ம் வகுப்பு நடைபெறும் பொதுத்தேர்வு பாடவாரியாக எந்தந்த  தேதியில் நடைபெறும் என்ற குழு அட்டவணையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, மே 5 முதல் மே 28 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும், செய்முறை தேர்வுகள்- ஏப்ரல் 25 – மே 2 வரை நடைபெறும் என  அறிவித்தார்.

மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  மே 6 முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகும்.  மே 9 முதல் மே 31 ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூலை 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார்.

இந்நிலையில், 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு பாடவாரியாக எந்தந்த  தேதியில் நடைபெறும் என்ற முழு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்