சிவராத்திரி அன்று இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும்..!நீங்கள் சிவபெருமானின் அருள் பெறலாம்..!
இன்று மகாசிவராத்திரி என்பதால் சிவபெருமானின் அருள் பெற அவருக்காக விரதம் மேற்கொண்டு, கண் விழித்து பூஜை செய்து இறைவனை வணங்குவர். இன்று சிவபெருமானின் ஆசிர்வாதம் பெற நீங்கள் விரதம் மேற்கொண்டாலும் சரி விரதம் மேற்கொள்ளவில்லை என்றாலும் சரி, கண் விழித்தாலும் சரி கண் விழிக்கவில்லை என்றாலும் சரி, இந்த ஒரு வரி மந்திரம் போதும்.
சிவபெருமானுக்கு வில்வ இலைகளை போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது ‘சம்போ சிவ சம்போ’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. இதனை நீங்கள் 108 முறை உச்சரிப்பது சிறப்பு. ஓம் நமசிவாய.