மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார்..! – கமலஹாசன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ட்வீட்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க.’ என பதிவிட்டுள்ளார்.
மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் @mkstalin பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க. pic.twitter.com/JGt9KWwdrt
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2022