#Breaking:மீட்புப்பணி – 4 மத்திய அமைச்சர்கள் செல்லும் நாடுகள்!
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்ள 4 மத்திய அமைச்சர்கள் செல்லும் நாடுகளின் விவரம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் காரணமாக,அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.இதனால்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.அந்த வகையில்,உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்க வேண்டும் என டெல்லியில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில்,மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து,உக்ரைனில் அண்டை நாடுகளுக்கு அமைச்சர்களை அனுப்பி வைப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்றும்,அந்த வகையில்,மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ,ஜோதிராத்திய சிந்தியா,ஹர்தீப் சிங்,விகே சிங் உள்ளிட்டோர் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்ள ஆபரேசன் கங்கா திட்டத்தின்படி 4 மத்திய அமைச்சர்கள் செல்லும் நாடுகளின் விவரம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,
- மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா – ருமேனியா & மால்டோவாவுக்கு செல்கிறார்.
- மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ – ஸ்லோவாகியா செல்கிறார்.
- மத்திய நகர்ப்புறத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி – ஹங்கேரி செல்கிறார்.
- மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் – போலாந்து நாட்டிற்கு செல்கிறார்.