#INDvSL: மூன்றாவது டி20 போட்டி – டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு!
இந்தியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 17.1 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3 வது டி20 போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இலங்கையை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. கடைசி போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் இலங்கை உள்ளது.
தர்மசாலாவில் நடைபெறும் முன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி தொடக்க வீரரான இஷான் கிஷனுக்கு நேற்றைய போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும் இன்றைய போட்டியில் இந்திய அணியில் ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், அவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை (விளையாடும் லெவன்): பதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, சரித் அசலங்கா, தினேஷ் சந்திமால் (விக்கெட் கீப்பர்), ஜனித் லியனகே, தசுன் ஷனக (கேப்டன்), சமிக கருணாரத்னே, துஷ்மந்த சமீரா, ஜெஃப்ரி வான்டர்சே, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா(கேப்டன்), சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.