ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கிய கூகுள்..! அதிரடி உத்தரவு பிறப்பிப்பு…!
யுடியூப், முகநூலைத் தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனமும் ரஷிய ஊடகங்கள் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் தாக்குதல் நடத்தி அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதைதைத் தொடர்ந்து, ரஷிய அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் ஊடகங்கள், பேஸ்புக் மூலம் பெரும் அனைத்து விளம்பர வருமானத்திற்கு அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை தடை விதித்தது. கடந்த சனிக்கிழமை, ரஷிய அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் ஊடகங்கள், யுடியூப் இணையதளங்கள் மற்றும் விடியோக்களில் விளம்பரங்கள் மூலம் பெரும் அனைத்து விளம்பர வருமானத்திற்கு யுடியூப் அதிகாரப்பூர்வமாக தடை விதித்தது,
இதனையடுத்து, யுடியூப், முகநூலைத் தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனமும் ரஷிய ஊடகங்கள் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு தடை விதித்துள்ளது.