#BREAKING: இந்திய மாணவர்கள் விசா இன்றி வர அனுமதி- போலந்து அறிவிப்பு..!
உக்ரைனில் இருந்து வரும் இந்திய மாணவர்கள் விசா இன்றி போலந்து வர அனுமதி என போலந்து தூதர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்த இராணுவ நடவடிக்கை தொடர்ந்து இன்று நான்காவது நாட்களாக ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது. இன்று பெலாரஸில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என தெரிவித்தார்.
ஆனால் பேச்சுவார்த்தையை பெலாரஸில் இல்லை என்றும் உக்ரைன் மீது படையெடுக்க பெலாரஸ் இடம் கொடுத்ததால் அங்கு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என கூறினார். மேலும், போலந்தின் வார்ஸா, துருக்கியின் இஸ்தான்புல், ஹங்கேரியின் புடாபெஸ்ட் என இந்த நகரங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார். பெலாரஸின் ஹோமல் நகரில் ரஷ்யாவின் குழு தயார் நிலையில் உள்ளது.
இதற்கிடையில், உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது உக்ரைனில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 150,000க்கும் அதிகமானோர் போலந்து, மால்டோவா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் இருந்து வரும் இந்திய மாணவர்கள் விசா இன்றி போலந்து வர அனுமதி என போலந்து தூதர் ஆடம் புரக்கோவ்ஸிகி தெரிவித்துள்ளார்.