#Breaking:பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகள் தயார் என ரஷ்யா அறிவிப்பு!
உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தங்களது பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு.
உக்ரைனின் பெரிய நகரமான கார்கிவ் பகுதியில் உக்ரைன் – ரஷ்யா இடையே தற்போது கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. ஆனால்,கார்கிவ் பகுதியை கைப்பற்றி விட்டதாகவும்,471 உக்ரைன் வீரர்களை கைது செய்துள்ளதாகவும் சற்று முன்னதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தங்களது பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் அரசு முன்னதாக கூறியிருந்த நிலையில்,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தங்களது பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் அறிவித்துள்ளது.
இதற்கிடையில்,உக்ரைனில் தங்கள் படைகள் தீரத்துடன் போரிட்டு வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.