இந்தியாவுக்காக 100-வது வெற்றியுடன் உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா..!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற உலக சாதனையை ரோஹித் பெற்றார்.

தர்மஷாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பேட்டிங்கால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றி தொடரை 2-0 என கைப்பற்றியது.

ஷ்ரேயாஸ் ஐயர் 44 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 39 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 18 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்தியா 17.1 ஓவரில் 17 பந்துகள் மீதமிருக்க 186 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ரோஹித் ஷர்மா தலைமையில் சொந்த மண்ணில் விளையாடிய 17 டி20 போட்டிகளில் 16-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே முன்னாள் கேப்டன் விராட் கோலி (13), எம்.எஸ் தோனியின் (10) எண்ணிக்கையை விட ரோகித் முன்னிலையில் உள்ளார்.

இங்கிலாந்தின் இயான் மோர்கன் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் தலா 15 வெற்றிகளைப் பெற்று இந்த சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். ரோஹித் தலைமையில் இந்தியா இதுவரை விளையாடிய 24 போட்டிகளில் 22ல் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றி இருப்பது ரோஹித்தின் 11-வது தொடர் வெற்றி மட்டுமல்ல, தொடர்ந்து மூன்றாவது தொடருக்கான சாதனையும் ஆகும்.

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 189 போட்டிகளில் 117ல் வெற்றி பெற்று 100க்கு மேல் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியா தற்போது 158 போட்டிகளில் 100 போட்டிகளில் வெற்றி பெற்று அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

 நியூசிலாந்து சொந்த மண்ணில் 73 போட்டிகளில் விளையாடி 39-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா விளையாடிய 60 போட்டிகளில் 39- வெற்றி பெற்றுஉள்ளது.

 

author avatar
murugan