ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமனம்!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஜஸ்டின் லாங்கரின் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை உள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.முன்னதாக,பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் டேரன்லெமன் பதவி விலகியதால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இருந்து வந்த நிலையில்,தற்போது பதவி விலகியிருக்கிறார்.
இந்நிலையில்,அவரின் இந்த ராஜினாமாவை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்து,அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
Cricket Australia has today accepted the resignation of men’s team head coach Justin Langer. pic.twitter.com/BhjrN9kuF3
— Cricket Australia (@CricketAus) February 5, 2022
இது தொடர்பாக,ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
“ஆஸ்திரேலிய அணியாது இலங்கைக்கு எதிரான T20I தொடரில் விளையாடவுள்ள நிலையில்,நமது ஆண்கள் தேசிய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பதவியேற்கவுள்ளார்”,என்று தெரிவித்துள்ளது.
Andrew McDonald will step up into the role of interim head coach of our men’s national team, with official duties beginning with Australia’s upcoming T20I series against Sri Lanka. pic.twitter.com/BW3j4PBPrf
— Cricket Australia (@CricketAus) February 5, 2022