#Breaking:சற்று ஆறுதல்…மீண்டும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 1059 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,20,80,664 ஆக உள்ளது.

  • இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,49,394  ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 21,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,20,80,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,059 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 5,01,114 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,30,814 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,02,47,902 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  13,31,648  சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 1,68,98,17,199 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 47,53,081 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்