ஒடிசா முன்னாள் முதல்வர் மரணம்..! முதல்வர் இரங்கல்…!

ஒடிசா முன்னாள் முதல்வர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்.
ஒடிசாவில் ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹேமானந்தா பிஸ்வால் உடல் நலக்குறைவு காரணமாக புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார்.
இவரது பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமானந்த பிஸ்வால் மறைவுற்றதை அறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும்; காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
Saddened to hear about the demise of former Odisha Chief Minister Thiru. Hemananda Biswal.
My deepest condolences to his bereaved family and colleagues in Congress party.
— M.K.Stalin (@mkstalin) February 26, 2022