இன்றுடன் முடியும் வேட்புமனு தாக்கல் – புதிய வங்கி கணக்கு தொடங்க திண்டாடும் வேட்பாளர்கள்!

Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், புதிய வங்கி கணக்குகளை தொடங்க வேட்பாளர்கள் திண்டாட்டம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்க கடந்த 28-ஆம் தேதியில் இருந்து பெறப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வேகமாக தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவோடு புதிய வங்கி கணக்கிற்கான பாஸ்புக் கேட்கப்படுவதால் வேட்பாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால், வங்கி கணக்கு துவங்க அரை நாள் செலவிட வேண்டிய கட்டாயத்தில் வேட்பாளர்கள் உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது தங்கள் மனுவில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த விவரம், மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்த விவரங்கள் உள்ளட்டவை தெரிவிக்க வேண்டும்.

மேலும், ஆதார், பான்கார்டு ஜெராக்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 5 ஸ்டாம் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்ப்பித்து வருகின்றனர். இதே நேரத்தில் வேட்பாளர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதற்கான பாஸ்புக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்தால் கேட்டு கொள்ளப்படுகிறது.

இதனால் வேட்பாளர்கள் கடைசி நநேரத்தில் வங்கியில் காத்திருந்து வங்கி கணக்கு தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சிலர் புதிய வங்கி பாஸ்புக்கை மட்டும் மறுநாள் சமர்ப்பிக்கிறேன் எனக்கூறி வருகின்றனர். இதுபோன்று நெல்லை உள்ளிய சில மாநகராட்சியில் பல வேட்பாளர்கள் புதிய வாங்கி கணக்கு தொடங்க திண்டாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகளில் கூறுகையில், மாநகராட்சி தேர்தலை பொறுத்தளவில் வேட்பாளர்கள் ரூ.85 ஆயிரம் மட்டுமே தேர்தல் செலவுக்காக பயன்படுத்த வேண்டும். அதற்காக புதிய வங்கி கணக்கு தொடங்கி, அதன் மூலம் செலவினங்களை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. பழைய வங்கி கணக்கு என்றால், அது குழப்பத்தை உண்டாக்கும். இருப்பினும் சில வேட்பாளர்களுக்கு பழைய வங்கி கணக்கு பாஸ்புக்கை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்