#Breaking:உக்ரைனில் இணையதள சேவை முடக்கம்!
உக்ரைன் – ரஷ்யா இடையே கடும் சண்டை நடைபெறும் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக கூறியிருந்தார்
அதன்படி,உக்ரைன் தலைநகர் கீவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 3 வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைன் – ரஷ்யா இடையே கடும் சண்டை நடைபெறும் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,கீவ் ராணுவ தளத்தை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியை முறியடித்துவிட்டதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.