இந்தியா – இலங்கை இடையே இன்று 2-வது டி20 போட்டி!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தது.
அதன்படி,களமிறங்கிய இந்திய அணி இறுதியாக 20 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.200 ரன்கள் இலக்குடன் இலங்கை களமிறங்கிய இலங்கை அணிஇறுதியில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் டி20 போட்டியை 62 என்கிற பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதனால்,3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில்,இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.இரு அணிகளும் மோதும் இப்போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
அணிகள்:
சாத்தியமான இந்தியா லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்),இஷான் கிஷன் (வி.கீப்பர்),ஷ்ரேயாஸ் ஐயர்,சஞ்சு சாம்சன்,தீபக் ஹூடா,ரவீந்திர ஜடேஜா,வெங்கடேஷ் ஐயர்,ஹர்ஷல் படேல்,புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா,யுஸ்வேந்திர சாஹல்.
சாத்தியமான இலங்கை லெவன்: நிரோஷன் டிக்வெல்லா (வி.கீப்பர்), பதும் நிஸ்ஸங்கா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), சாமிக்க கருணாரத்னா, துஷ்மந்த சமீரா, ஜெப்ரி வான்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா,லஹிரு குமாரா.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025