#Breaking:ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி!

Default Image

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வை நெருங்கி வருகிறது.இதனால்,உக்ரைனை சார்ந்த ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருந்தார்.அதனை தொடர்ந்து,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்தார்.

இந்நிலையில்,ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்துள்ளது.

குறிப்பாக,ஐ.நா.வில் அமெரிக்கா மற்றும் அல்பேனியா கொண்டு வந்த வரைவு தீர்மானத்துக்கு 11 நாடுகள் ஆதரவு அளித்த நிலையில்,உலக அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை காட்டவே தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால்,இந்தியா,சீனா,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 3 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.இது குறித்து, இந்தியா கூறுகையில் நடுநிலையை பேணுவதன் காரணமாகவே ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என விளக்கமளித்துள்ளது.

மேலும்,15 நாடுகள் கொண்ட கவுன்சிலின் தீர்மானத்துக்கு எதிராக நிரந்தர உறுப்பினரான ரஷ்யா வாக்களித்தது.இதனால்,ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்துள்ளது .

வீட்டோ அதிகாரம் என்பது ஐ.நா.வில் சட்டமியற்றும் அமைப்பு நிறைவேற்றும் தீர்மானங்களை தடை செய்யும் அதிகாரம்  ஆகும்.இந்த அதிகாரம் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்