TNPSC தேர்வர்கள் கவனத்துக்கு – OTR கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

Default Image

TNPSC தேர்வர்களுக்கு OTR கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration) கணக்கு வைத்திருக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும், அவர்களது ஆதார் எண்ணை வரும் 28-ஆம் தேதிக்குள், ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் தவறாமல் இணைக்க வேண்டும் என்றும், அதனடிப்படையில், எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கடந்த 1-ஆம் தேதி TNPSC வெளியிட்டிருந்த அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஒருங்கிணைந்த குரூப் II மற்றும் குரூப் IIA தேர்விற்கான அறிவிக்கை 23 அன்று தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கு, இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23 ஆகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு, ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடைசி நாள் 28.02.2022 ஆகும். ஆகையால், 28க்குள் ஆதார் எண்ணை ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் இணைக்காதவர்கள், ஒருங்கிணைந்த குரூப் II மற்றும் குரூப் IIA தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்படும்.

இந்த நிலையில், TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் (OTR) ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதேவேளையில், குரூப் II மற்றும் குரூப் IIA தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 23.03.2022 என்பதால், அத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தவறாமல் 23.03.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை ஒருமுறை இணைத்தால் போதுமானது என்பதால், ஏற்கனவே தங்களது ஆதார் எண்ணை இணைத்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் இணைக்கத் தேவையில்லையென இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்