#BREAKING: உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கியது ஸ்வீடன் அரசு!

ராணுவ உதவிகளை ஸ்வீடன் அரசு வழங்கியது என்று உக்ரைன் அதிபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்துள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். ஒரு சில நேட்டோ கூட்டமைப்பை சிறந்த அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளனர்.
ஆனால் நேரடியாக ராணுவ படைகளையோ, உதவிகளையோ அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டியிருந்தது. நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய நேட்டோவின் பொதுச்செயலாளர், தற்போதைக்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்புவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் உக்ரைனுக்கு ராணுவ சார்ந்த உதவிகளை ஸ்வீடன் அரசு வழங்கியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ உதவியை செய்யும் முதல் நாடு ஸ்வீடன் என்பதாகும். முதல் நாடாகா ஸ்வீடன் அரசு, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கியதை தொடர்ந்து, போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறதா உக்ரைன்? என்றும் கேள்விகள் எழுப்பப்படுகிறது.
Sweden provides military, technical and humanitarian assistance to Ukraine. Grateful to @SwedishPM for her effective support. Building an anti-Putin coalition together!
— Володимир Зеленський (@ZelenskyyUa) February 25, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025