#IPL2022: அணிகள் பிரிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் புதிய முறையில் லீக் ஸ்டேஜ்! – ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!
15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி மே 29ம் தேதி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாக அறிவிப்பு.
15-வது சீசன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 600 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 377 பேர் இந்தியர்கள் ஆவர். ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் தங்களிடம் இருந்த இருப்புத்தொகைக்கு ஏற்ப கணக்கு போட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். இந்த நிலையில், ஐபிஎல் 2022, 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி மே 29ம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ நடத்திய ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, மும்பை – வான்கடே மைதானம் 20 போட்டிகள், மும்பை – பிரபோர்ன் மைதானத்தில் (சிசிஐ) 15 போட்டிகள், மும்பை – DY பாட்டீல் மைதானத்தில் 20 போட்டிகள், புனே – எம்சிஏ சர்வதேச மைதானத்தில் 15 போட்டிகள் என மொத்தம் 70 லீக் போட்டிகள் நான்கு மைதானங்களில் நடைபெற இருக்கிறது.
அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகள் வான்கடே மைதானம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் விளையாடும். புனேவில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியம் (சிசிஐ) மற்றும் எம்சிஏ இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் தலா 3 போட்டிகள் விளையாடும். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகள் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் (7 ஹோம் மேட்ச்கள் மற்றும் 7 அவே மேட்ச்கள்) மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், அதைத் தொடர்ந்து 4 பிளேஆஃப் போட்டிகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த முறை ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளை இரண்டு குழுக்களாக (IPL 2022 Groups) பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Group A-வில் MI, KKR, RR, DC, LSG, Group B-யில் CSK, SRH, RCB, PBKS, GT ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு குரூப்பில் இருக்கும் ஒவ்வொரு அணியும், எதிர் குரூப்பில் உள்ள 5 அணிகளுடன் இரண்டு முறை விளையாடும். அதேபோல், அதே குரூப்பில் உள்ள மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை விளையாடும். அதில் 2 ஹோம் மேட்ச்கள், 2 வெளியூரில் விளையாடும்.
ஐபிஎல் சாம்பியன்ஷிப் வெற்றிகளின் எண்ணிக்கை மற்றும் அந்தந்த அணிகள் விளையாடிய இறுதிப் போட்டிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே போட்டிகளை நடத்த பிசிசிஐ நிர்வாகம் உறுதியாக உள்ளது. தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், ஐபிஎல் போட்டிகளை கண்டுகளிக்க 40% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், கொரோனாவின் பரவல் குறையும் பட்சத்தில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
???? NEWS: Key decisions taken in IPL Governing Council meeting regarding #TATAIPL 2022 Season.
Tournament to commence on March 26, 2022. Final on May 29, 2022.
7⃣0⃣ league matches to be played across 4⃣ venues in Mumbai & Pune. Playoff venues to be decided later.
Details ????
— IndianPremierLeague (@IPL) February 25, 2022