யாரிடம் இருந்தும் பதில் இல்லை; அவர்கள் அஞ்சலாம் உக்ரைன் அஞ்சவில்லை- உக்ரைன் அதிபர்..!

Default Image

நேரடியாக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் கொண்டு உதவி கேட்டேன். ஆனால், யாரிடம் இருந்தும் பதில் இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நள்ளிரவு வெளியிட்ட வீடியோவில் மக்களிடம் மிக உருக்கமாக உரையாற்றியுள்ளார்.  அப்போது, முதல் நாளில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 316 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனுக்கு உதவுமாறு நேட்டோ அமைப்பு உள்ளிட்ட 27 நாடுகளிடம் கேட்டுக்கொண்டேன்.  நேரடியாக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் கொண்டு உதவி கேட்டேன்.

ஆனால், யாரிடம் இருந்தும் பதில் இல்லை. அவர்கள் அஞ்சலாம் ஆனால் உக்ரைன் அஞ்சவில்லை. எதற்கும் அஞ்சவில்லை. ரஷ்யாவுக்கு உக்ரைன் பயப்படவில்லை.  இந்த நிமிடம் வரை உக்ரைன் நேட்டோ உறுப்பினரில்லை. அந்த அமைப்பினர் இதுவரை உதவவில்லை, அவர்களின் என்ன உத்தரவாதத்தை உக்ரைனுக்கு தர முடியும்.? ரஷ்யாவை எதிர்த்து எங்களுக்கு உதவ அவர்கள் அஞ்சலாம். உக்ரைன் யாரிடமும் பயமில்லை என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்