உக்ரைன் – ரஷ்யா 2ம் நாள் போர் – நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவிப்பு!

Default Image

உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுக்க நேற்று அதிகாலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, பலமணிநேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, நேரடியாக ராணுவ படைகள் மூலம் தாக்குதலை மேற்கொண்டது. உக்ரைன் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவதால் உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் அங்குமிங்கும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. லுஹான்ஸ்க்கில் 2 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தது.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு உக்ரைன் ராணுவ தளங்கள், விமான தலங்களை மட்டுமே தாக்கி வருவதாக ரஷ்யா அதிபர் தெரிவித்தார். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என அறிவித்தனர். உக்ரனைக்கு நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஆயுதங்கள் வழங்கி ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். ரஷ்யாவுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலை ஐநா சபை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆனால் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பெலாரஸில் முகாமிட்டிருந்த ரஷ்யப்படைகள் தரை மார்க்கமாக உக்ரைனுக்குள் நுழைந்து தலைநகர் கீவ் சென்றடைந்தனர். இந்த தாக்குதலில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

செர்னோவில் உள்ள அணு உலையையும் ரஷ்யா ராணுவ படையினர் கைப்பற்றின. இந்த சூழலில், உக்ரைன் மீது இன்று இரண்டாம் நாள் தாக்குதலை ரஷ்யா தொடங்கியுள்ளது. தலைநகர் கீவில் இடைவிடாது ஏவுகணை தாக்குதல்கள் நடப்பதாக உக்ரைன் அரசு ஆலோசகர் தகவல் கூறியுள்ளார். பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், ரஷ்யாவின் போர் விமானத்தை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் பொருளாதாரம் தடை உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து படையெடுத்து வருகிறது. இது தாக்குதல் தொடர்ந்து நடைபெறுமாயின் அடுத்த ஓரிரு நாட்களில் உக்ரைன் முழுவதையும் ரஷ்ய ராணுவம் கைப்பற்றி விடு என கூறப்படுகிறது. போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரயில்நிலையங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த நேட்டோ அமைப்பும், ராணுவ படைகளை அனுப்புவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என பொதுச்செயலாளர் தெரிவித்திருந்தார். இதனிடையே, உக்ரைன் மீது அரசு நடத்தும் போரை நிறுத்தக்கோரி ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறை கைது செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உக்ரைன் மக்களுக்காக சுற்றி இருக்கும் நாடுகளின் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லூதுவேனியா மக்கள் போராட்டம் நடத்தி ஆதரவை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்துள்ளது. நெருக்கடியாக நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவுடன் இருப்போம் என உலக வங்கி குழுவின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்